உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்டில் அறிவிப்பு - மாநில தேர்தல் ஆணையம்

ஆகஸ்ட் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணைய அலுவலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜூலை இரண்டாம் வாரத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துவிடும் எனவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குபெட்டி பயன்படுத்தப்படும் எனவும் விவிபேட் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்