கோபிசெட்டிபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கோபிசெட்டிபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றினால்  மொடச்சூர், நாயக்கன்காடு, அக்ரஹார வீதி  உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட  மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்