மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி

மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி
x
மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலூர் கூத்தப்பன்பட்டியில் உள்ள நாகம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீர‌ர்களும் பங்கேற்றனர். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். காளைகளை அடக்கும் முயற்சியில் 5 மாடு பிடி வீர‌ர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்