தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

'தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
x
'தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின், தேசிய செயற்குழு கூட்டம் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தமிழகத்தை ஒருபோதும் பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்றும், 'தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பது குறித்து தமிழக பா.ஜ.க. சார்பில் மத்திய தலைமைக்கு தெரியப்படுத்துவோம்' என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்