முருகன் கோவில்களில் வைகாசி திருவிழா துவக்கம் : பக்தர்கள் சுவாமி தரிசனம்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் வீடான திருப்பரங்குன்றத்தில், வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
x
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் வீடான திருப்பரங்குன்றத்தில், வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், விதவிமான காவடிகள் சுமந்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி, முருகனை வழிபட்டனர்.

திருச்செந்தூர்:

2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர். பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்