சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
x
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்பங்களை பெறுவதற்காக சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் குவிந்தனர். மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சாஸ்திரி, விண்ணப்பங்களை வழங்கினார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க மே 31ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழக அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீட்டின்படி, மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

வாங்க குவிந்த மாணவர்கள், மாணவிகள் 
 

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை சட்டக்கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தொடங்கி வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவினருக்கு 250 ரூபாய், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய் என்று விண்ணப்பத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள் மே 31ஆம் நாள் மாலை 5 மணிக்குள் கல்லூரியில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்