புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...

கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
x
மன்னர் வாழ்ந்த மாளிகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் செழிப்புடன் இருந்தன. அப்போது, குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலுக்கு பிறகு மாவட்ட முழுவதும் சின்னாபின்னமானது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மரங்களும் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் சேதமாகின. இதனால், அடர்ந்த வனம் போல் இருந்த ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது. பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்கள், பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நிவாரணப் பணிகள் நடைபெற்றன. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேதமான பல்வேறு வகையான மரங்கள் அப்புறப்படுத்தப் படவில்லை. மூலிகைச் செடிகளும் மீட்கப்படவில்லை. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகம் கோரமாக காட்சியளிக்கிறது. மரங்களின்றி நிழல் அற்றுப் போனதால், கடும் வெயிலை சமாளிக்க முடியாமல், மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். வீணாக மட்கும் மரங்களை அப்புறப்படுத்தி, புதிய மரக்கன்றுகளை நடுமாறு, ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என அவர்கள் வேண்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்