வாழைத்தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம்
சத்தியமங்கலத்தை அடுத்த விளாமுண்டியில், தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 100க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த விளாமுண்டியில், தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 100க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதை பார்த்த விவசாயி அப்புசாமி, வனத்துறைக்கு தகவல் அளித்தார். விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் ஒற்றையை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். சேதமடைந்த 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி அப்புசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story

