ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...
பதிவு : மே 15, 2019, 02:10 PM
காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரின்றி கல்லணை வறண்டு போய் உள்ளதால்,  தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே,  தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 90 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்துள்ள விவசாயிகள்,  மின்மோட்டார் நீரை வைத்து முழுமையாக விவசாயம் செய்ய முடியாது என தெரிவித்தனர். கிணற்று பாசனத்தால் மகசூல் குறைந்த அளவு தான் கிடைக்கும் என்றும், காவிரி நீர் வந்தால் மட்டுமே உரிய மகசூல் கிடைக்கும் என்றும்,  பயிரை காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.  ஜூன் 12 தண்ணீர் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு

காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு

183 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறது அரசு - கனிமொழி எம்.பி

தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

15 views

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விளாங்குப்பம் நடுகாட்டில் உள்ள மலைமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

4 views

தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர்தான் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

9 views

தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

6 views

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

10 views

அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - முன்னாள் அ.தி.மு.க. எம்.பி உதயகுமார் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 1983-ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.