காவல்கிணறு பகுதியில் 2 நாட்கள் காத்திருந்தால், 2 குடம் தண்ணீர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
x
காவல்கிணறு ஊராட்சியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை வறண்ட நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட  மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது, லாரிகள் மூலம் அவ்வப்போது வழங்கப்படுகிறது. எப்போது, தண்ணீர் வழங்கப்படும் என தெரியாததால், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ஊராட்சி நிதியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், முறையாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்