தேர்தல் பறக்கும் படை அதிகாரி என கூறி மோசடி - 4 பேர் கொண்ட மர்மகும்பலுக்கு போலீஸ் வலை
பதிவு : மே 11, 2019, 12:25 PM
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி, நிதி நிறுவன ஊழியர்களிடம் சுமார் 20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்களான சரவண குமார், ஆனந்தன் ஆகியோர், மதுரையில் உள்ள  தலைமை அலுவலகத்துக்கு 20 லட்சம் ரூபாய் பணத்துடன் பேருந்தில் சென்றுள்ளனர். மதுரை வரிச்சியூர் பகுதியில், அந்த பேருந்தை, 'தேர்தல் அவசரம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த 4 பேர் வழி மறித்துள்ளனர்.  பேருந்துக்குள் ஏறி, நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யார் என கேட்டு,  சரவணக் குமார் மற்றும் ஆனந்தனை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் அவர்களை இறக்கி விட்டு, பணத்துடன் அந்த கும்பல் தப்பி விட்டது.இது தொடர்பாக, கருப்பாயூரணி போலீசில் நிதி நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

127 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறது அரசு - கனிமொழி எம்.பி

தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

15 views

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விளாங்குப்பம் நடுகாட்டில் உள்ள மலைமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

4 views

தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர்தான் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

9 views

தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

6 views

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

10 views

அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - முன்னாள் அ.தி.மு.க. எம்.பி உதயகுமார் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 1983-ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.