கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?
பதிவு : மே 11, 2019, 08:31 AM
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சந்தையில் கேன் வாட்டர் விநியோகம் சூடுபிடித்துள்ளது.
பருவ மழை பொய்த்து கோடை காலம் துவங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேன் வாட்டர் அதாவது கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாங்கும் கேன் வாட்டரின் தரம் பற்றி எழுந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்னை கோயம்பேட்டில், சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 700 க்கும் மேற்பட்ட அனுமதி இல்லாத தரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே சந்தையில் விற்கப்படும் கேன் குடிநீரின் தரத்தை, நுகர்வோர் ஆராய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தரமற்ற கேன் குடிநீர் விற்பனையால், அனைத்து விதமான நோய்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர், மருத்துவர்கள்.  எந்த நிறுவனத்தின் தண்ணீராக இருந்தாலும் அதனை முறையாக பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கை...பொதுமக்கள் தங்கள் உடல் நலனை பாதுகாக்க தாங்கள் பருகும் கேன் குடிநீரின், தரத்தை, சுய பரிசோதனை செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

பிற செய்திகள்

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

9 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

11 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

262 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

191 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.