'பறக்கும்' விமான கட்டணம்....நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகும் விமான பயணம்

தமிழகத்தில் சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு விமான பயணிகளை கையாளும் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் விளங்குகிறது.
x
தமிழகத்தில் சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு விமான பயணிகளை கையாளும் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் விளங்குகிறது. குறிப்பாக, தென் மாவட்ட மக்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று வர, திருச்சி விமான நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி- சென்னைக்கு 2 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த விமான கட்டணம், தற்போது, 4000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில், 12 ஆயிரம் ரூபாய் வரை ஒரு விமான பயணச்சீட்டு கட்டணம் எகிறுகிறது. இதனால், மருத்துவத்திற்கு அவசரமாக சென்னைக்கு செல்லும் பயணிகள், சாதாரண, நடுத்தர மக்களுக்கு விமான பயணம் என்பது எட்டாக்கனியாகி வருகிறது. இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு விமான பயணக் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்