ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...

ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.
ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
x
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி,  கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.  விடிய, விடிய பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர் வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காய்ந்து கிடந்த வனப்பகுதி புத்துணர்ச்சி பெற்று வருகிறது. நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை பெய்த மழையால் ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story

மேலும் செய்திகள்