மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் - சரி செய்யும் பணி தீவிரம்

ரயில் பாதை அருகே சிறிய குழாய் ஒன்று உடைந்ததால், கழிவு நீர் வெளியேறி தண்டவாளத்தில் தேங்கி உள்ளது.
மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் - சரி செய்யும் பணி தீவிரம்
x
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதை கொண்ட ரயில் நிலையம் என்று கூறப்படுகிறது. 100 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை அமைத்து 3 அடுக்குகளாக ரயில் நிலையம் இயங்கி வருகிறது.  முதல் அடுக்கில் டிக்கெட் கவுண்டர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் தண்டவாளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2வது அடுக்கில் உள்ள ரயில் பாதை அருகே சிறிய குழாய் ஒன்று உடைந்ததால், கழிவு நீர் வெளியேறி தண்டவாளத்தில் தேங்கி உள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் ​மெட்ரா ரயில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்