சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் தரைமட்டமானது.
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்
x
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் வசிக்கும் முனியசாமி என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை பட்டாசு  தயாரித்தபோது, உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. இதில் அந்த பகுதியில் உள்ள 3 வீடுகள் தரைமட்டமானது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அனைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்