போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில், பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, அந்த வழியே சென்ற வாகனங்களையும், பாதசாரிகளையும் வழிமறித்து, இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
x
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில், பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, அந்த வழியே சென்ற வாகனங்களையும், பாதசாரிகளையும் வழிமறித்து, இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால்,ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள்108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸில், அந்த போதை பெண்மணியை அப்புறப்படுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடுமையாக முயற்சித்தும் பலனிளிக்காததை தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசாராலும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியவில்லை. இறுதியில் போதையின் ஆட்டத்தில் களைப்பாகிப்போன அந்த பெண் அவராகவே அந்த இடத்தை விட்டு சென்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிபெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்