சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து...

திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார்.வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்த போது தீடீரென கார் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் கார் முழுவதுமாக எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் கார் ஓட்டுனர்  ராஜ்மோகன் காரில் இருந்து இறங்கியதால் உயிர்தப்பினார். இதனால்  திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்