"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது" - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி
x
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் டிஜிபி அசுதோஸ் சுக்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில், 3 ஆயிரத்து 173 காவலர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக்குமுன் வெளியூர் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாது என அவர் உறுதிபட கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்