தமிழகத்தில் பரவலாக மழை...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் பரவலாக மழை...
x
சேலம் :

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன்  பெய்த கனமழை, வெப்பத்தை தணித்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றினால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

வேலூர் :



வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சூறவாளி காற்றுடன் கனமழை பெய்தது. சுழன்றடித்து வீசிய காற்றில் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். 

ஆடுகள் பலி :

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு என்ற இடத்தில் சூறைகாற்றுடன் பெய்த மழையின் போது ஆட்டுக்கொட்டகை சுவர் இடிந்து விழுந்து 8 ஆடுகள் பலியாகின. சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துன. சேதம் குறித்து அமைச்சர் நிலோபர் கபீல் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

ஈரோடு :



ஈரோட்டில் பகல் நேரத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழை, வெப்பத்தை தணித்து இதமான சூழலை உருவாக்கியது. 

மேட்டுப்பாளையம் :



நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 88 புள்ளி 50 அடியாக உயர்ந்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனையடுத்து பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் தற்போதைய நீரமட்டம்  88.50 அடியாக உள்ளது. 




 



Next Story

மேலும் செய்திகள்