6 வயது சிறுவனுக்கு இளம் யோகா சாதனையாளர் விருது
6 வயது சிறுவன் ஜித்தேஷூக்கு இளம் யோகா சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியில் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் நடந்த விழாவில் சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் சாதனை புரிந்த 6 வயது சிறுவன் ஜித்தேஷூக்கு இளம் யோகா சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறுவன் ஜித்தேஷ் கடினமான யோகாசனங்களை பல நிமிடங்கள் தொடர்ந்து செய்து, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்' மற்றும் 'பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளான்.
Next Story