குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை - தரகர் அமுதவள்ளி உள்ளிட்ட இருவர் கைது...

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை - தரகர் அமுதவள்ளி உள்ளிட்ட இருவர் கைது...
x
குழந்தை விற்பனை தொடர்பாக பெண் தரகர் அமுதா என்பவர், பேசிய ஆடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமுதா என்ற பெண்ணிடம் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் மேலும் 3 பெண் குழந்தைகளை விற்பனை செய்துள்ளது தெரிய வந்தள்ளது. குழந்தை விற்பனையில் மேலும், பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமுதாவும் அவரது கணவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும்  போலீசார் தெரிவித்துள்ளனர். 

3 குழந்தைகளை விற்றதாக அமுதவள்ளி ஒப்புதல்... 

இதற்கிடையே, அமுதவள்ளி ஒரு குழந்தையை அன்னதானப்பட்டியில் வாங்கி ஓமலூர் நகராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற்று மேட்டூரை சேர்ந்த  ரவி என்பவரிடம் விற்றதாக தெரிவித்துள்ளார்.  மேலும் 2 குழந்தைகளை கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுனர் முருகேசன் உதவியுடன் வாங்கி அதனை ஈரோடு பகுதியை சேர்ந்த பர்வீன் என்பவரிடம் விற்றதாகவும் ஒப்பு கொண்டுள்ளார்.  இதையடுத்து கொல்லிமலையை சேர்ந்த அரசு ஆம்புலன்சு ஓட்டுனர் முருகேசன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை" - சுகதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ், ஆடியோவில் உள்ளது போல், பிறப்பு சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். அவ்வாறு போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டு இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 



Next Story

மேலும் செய்திகள்