"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.
x
வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் தொகுதி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் டெல்லியில், தேர்தல் ஆணையர்களை சந்தித்தார். அப்போது வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அவர் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம், தனது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்