"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்
தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள் - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்
x
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வன்னியபெருமாள் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின், பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து படகுகளை நிறுத்துவதற்கு தேவையான துறைமுக வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், கடலோர காவல் நிலையங்களுக்கு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்