கடல் சீற்றத்தால், மீன்கள் இன்றி கரைதிரும்பிய மீனவர்கள்

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காததால், நாட்டுப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
கடல் சீற்றத்தால், மீன்கள் இன்றி கரைதிரும்பிய மீனவர்கள்
x
மண்டைக்காடு, ஆழிக்கால், கடியப்பட்டணம், முட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது.இதனிடையே, கடலுக்கு சென்ற சிலரும் மீன்கள் இன்றி கரைதிரும்பினர்.வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை சீர்செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்