ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல்
x
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆறு மாதங்கள் கடந்தும் அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர்  பரிசீலிக்கவில்லை என நளிளி தெரிவித்துள்ளார். 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்களை அரசு முன் கூட்டி விடுதலை செய்கிறது என்றும், அதுபோல தங்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி உள்துறை செயலருக்கும், முதலமைச்சருக்கும் பிப்ரவரி மாதம்  கோரிக்கை மனு அனுப்பியதாகவும், அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்