"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
x
ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அமுதா என்ற பெண் பேசிய ஆடியோ ஒன்று வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரிடம் தொலைபேசி வாயிலாக இது குறித்து கேட்டபோது, ஆடியோ விவகாரம் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணையின் இறுதியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.க்கு தொலைபேசி மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட அமுதா தலைமறைவாக உள்ள நிலையில், 30 ஆண்டுகளாக இந்த சம்பவம் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் குழந்தைசாமி  தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்