காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா செய்ய முடிவு...

மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
x
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பதக்கத்தையும் திருப்பி அளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி தனக்கு 6 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கவில்லை எனவும் தற்போதுள்ள மூத்த அதிகாரிகள் தன்னை அவமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்