காவலர் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா...?

21 நாட்கள் விடுப்பில் வீட்டுக்கு இருந்த காவலர் ஒருவர் பணிக்கு திரும்பிய அன்றே, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு அருகே சாத்தன்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் அஜீன் ராஜ்... மணிமுத்தாறு 9 வது படைப்பிரிவில், ஆயுதபடை காவலராக பணிபுரிந்து வந்தார்...21 நாட்கள் விடுப்பில் சென்றிருந்த அஜீன் ராஜ், புதன்கிழமை  தான் மீண்டும் பணிக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டுள்ளது..உடை மாற்றுவதற்காக அறைக்குள் சென்றுள்ளார் அஜீன் ராஜ்... அவர் அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது,  கழுத்தில் குண்டு பாய்ந்து , மூளை சிதறி இறந்து கிடக்கிறார் காவலர் அஜீன் ராஜ்...

26 வயதேயாகும் அஜீன் ராஜ், பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பார் என்றே முதலில் பரவலாக பேசப்பட்டது...போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் காதல் விவகராத்தால் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது...விடுமுறை நாட்களை காதலியுடன் செலவிட்ட போது,அஜீன் ராஜிற்கும், அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உலைச்சலில் இருந்த அஜீன் ராஜ்,  தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்திருக்கிறார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும், அடுத்தடுத்து நிகழும் போலீசார் தற்கொலை சம்பவகள், காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்