சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
பதிவு : ஏப்ரல் 24, 2019, 06:15 PM
தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸடெர்லைட் ஆலை, மக்கள் போராட்டங்கள்  காரணமாக தொடர்ந்து இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆலையின் 2 ம் கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய சுற்று சூழல்  அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல்,  தமிழ்நாடு அரசின் சிபகாட் நிறுவனம்  நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டு  எழுந்தது. இது தொடர்பாக முத்துராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள் தலைமையிலான  அதிகாரிகள் தூத்துக்குடிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கலியபெருமாள், ஸடெர்லைட் ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்க கட்டுமானப் பணிகள் மற்றும் மின் இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்களை மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அளிக்க  உள்ளதாக கூறினார்.

பிற செய்திகள்

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் : எனது மகளின் சாவுக்கு நீதி வேண்டும்" - சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்

புதையல் வேட்டைக்காக நரபலி கொடுக்கப்பட்ட தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

15 views

2 வது முறையாக பற்றி எரிந்த திருச்சி காந்தி மார்க்கெட் - 24 கடைகள் தீப்பற்றி சேதம்

திருச்சி காந்தி மார்க்கெட் மைய புறத்தில் கடைகள் தீப்பற்றியதில், 24 கடைகள் தீக்கிரையாயின.

10 views

இன்று உலக மிதிவண்டி தினம்

இன்று உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது

33 views

மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

33 views

இடி, மின்னலுக்கு இடையே தோனி தனது மகளுடன் பைக் சவாரி...

இடி, மின்னலுக்கு இடையே தோனி ,தனது மகளுடன் பைக் சவாரி மேற்கொண்டார்.

68 views

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.

206 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.