தேசிய வருவாய் திறனாய்வு தேர்வில் சாதனை புரிய ஆசிரியர்கள் ஊக்குவித்தனர் - சக்திவேல், மாணவன்

தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வில், சத்தியமங்கலத்தை அடுத்த கோடேபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
x
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் கோடேபாளையம் பள்ளியை சேர்ந்த 11 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், சக்திவேல் என்ற மாணவர் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். எஞ்சிய 10 மாணவர்களும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, 7 ஆண்டுகளாக கோடேபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்