ஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்

தஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
x
தஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 

தஞ்சாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 15 மாணவியர்கள் சேர்ந்து ஸ்கை என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்  என்ற செயற்கை கோளை தயாரித்துள்ளனர். இவர்கள் 15 பேரும் சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 

இந்த செயற்கைகோள், இஸ்ரோ மைய முன்னாள் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளானது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன் 70 ஆயிரம் அடி வரை விண்வெளிக்கு சென்று அங்குள்ள வெப்ப நிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டத்திற்குள், கீழே தரையிரங்கும். 

இந்த செயற்கைகோள் மேலே செல்லும் போதும், கீழே இறங்கும் போதும் அதில் உள்ள கேமரா உதவியுடன் வான்வெளியிலுள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், வாயுக்களின் தன்மை ஆகியவை கண்டறியப்படும் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்