தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் சென்னை : என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.
x
சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட ஒரு கோடி. அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டன. சென்னையின் ஒரு நாள் குடிநீர் தேவை 1200 மில்லியன் லிட்டராக இருக்க, 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் ஏழை, எளிய, குடிசைவாழ்  பெண்கள் தண்ணீருக்கு கண்ணீர் வடிக்காத குறையாக அல்லாடுகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள்  மற்றும் அலுவலகங்களுக்காக லாரி தண்ணீர் கேட்டு முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் வழக்கமாக 842 மில்லி மீட்டர் மழை பொழியும். ஆனால், 2018ஆம் ஆண்டில் 390 மில்லி மீட்டர் அளவிற்கே மழை பதிவானது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமான சூழலை உருவாக்கி இருப்பதால், பிரச்சினையை தீர்க்க, காவிரி மற்றும் கிருஷ்ணா தண்ணீரை போதுமான அளவிற்கு பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னை மக்களின் பிரச்சினையை போக்க, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்