சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் ஆனது...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் ஆனது...
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி வண்டலூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில், தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 5 ஆம்தேதி அதற்கான அரசாணையை பிறப்பித்து, பெயர் மாற்றம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டது. இதையடுத்து தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பயணச்சீட்டு, ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட அனைத்திலும் , ஓரிரு நாட்களில் பெயர் மாற்றப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்