தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பத்தாம் கட்ட விசாரணையை ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்
x
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களிடம் ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 9 கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவர் உட்பட 247சாட்சியங்களிடம் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 10ம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணைக்காக 47பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்