பெரியார் சிலை தலை உடைப்பு... அறந்தாங்கியில் பரபரப்பு...

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள், உடைத்துள்ளனர்.
x
அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள், உடைத்துள்ளனர். சிலை உடைக்கப்பட்டதை பார்த்த திராவிடர் கழகம் மற்றும் திமுக தொண்டர்கள், மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த, எஸ்.பி. இது குறித்து விசாரித்து வருகிறார். சம்பவம் இடத்தில் முகாமிட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மெய்யநாதன் உள்ளிட்டோர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். உடைக்கப்பட்ட பெரியார் சிலையை துணியால் மறைக்க முயன்றபோது, போலீசாரை திமுக மற்றும் திக-வினர் தடுத்தனர். மதவாத சர்ச்சையால் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்