தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை அ.தி.முக.வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்து,  மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள  ஜாக்கிங் கிளப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  நடிகர் - நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம், வாக்காக மாறாது என்றும், மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடும் என்றும் குறிப்பிட்டார். தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து நிறைய பணம் வெளியே வரும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்