துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்த சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
x
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்த சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆவணம் இல்லாமல் சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததாகவும், கேள்விகளுக்கு மாறி, மாறி பதில் அளித்ததாகவும் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்தார். சட்டரீதியாக சோதனையிட வந்தால் ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 5 மணியளவில் மேலும் 3 அதிகாரிகளும் அங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்