சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வாகன சோதனை நடத்தியபோது 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.
x
கொண்டலாம்பட்டி புறவழி சாலையில் நிலைக்குழு அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்றில் 73 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு நகை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அந்த நகைகளை மும்பையில் இருந்து எடுத்து வந்த‌தாக , பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரோகிணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்