செந்தில் பாலாஜி ஒரு சின்ன பையன் - தம்பிதுரை விமர்சனம்

தமிழகத்தில், கை சின்னத்திற்கு வாக்களித்தால் காவிரி நீர் கிடைக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
x
தமிழகத்தில், கை சின்னத்திற்கு வாக்களித்தால் காவிரி நீர் கிடைக்காது என  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தம்பிதுரை,  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ்  ஆட்சியில்  இருப்பதால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என்றும், தமிழகத்தில், கை சின்னத்துக்கும், அதன்  கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்தால் காவிரியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது என்றும் கூறினார். அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று கூறிய தம்பிதுரை, செந்தில் பாலாஜியை சின்னப் பையன் என்றும் விமர்சனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்