ஸ்டெர்லைட் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது உயர்நீதிமன்றம்...

பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று வேதாந்தா நிறுவனத்தின்  சார்பில்  வாதிடப்பட்டது. ஆலை  மூடப்பட்டதால் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பாழாகின்றன என்பதால்,  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கைகளை நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன், வழக்கு விசாரணை ஏப்ரல் 23க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அந்த பகுதியின்  சுற்றுச்சூழல், குடிநீர் தரம் உயர்ந்துள்ளதா என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

"அரசியல் செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன்"

ஸ்டெர்லைட் வழக்கில், தமது மனுவை ஏற்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை 
விடுத்ததாக வைகோ தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
ஸ்டர்லைட் விவகாரத்தில் தாம் அரசியல் செய்வதாக உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் குற்றஞ்சாட்டியதாக 
குறிப்பிட்டார்.  தாம் மக்களுக்காக 23 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இனியும் தொடருவேன் என்று 
நீதிபதியிடம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்