பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம்: பார் நாகராஜ் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பார் நாகராஜன் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
x
பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் அம்பலமானது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு,வசந்த் குமார், சதீஷ் உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்டத வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பார் நாகராஜன், தி.மு.க பிரமுகர் மகன் மணிமாறன் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள், கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்