வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

தமிழகத்தில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள 18  சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த 19ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.  தமிழக  மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பல அரசியல் கட்சிகளை சேர்ந்த  மற்றும் சுயேட்சையாக இதுவரை 551 ஆண் வேட்பாளர்களும், 88 பெண் வேட்பாளர்களும், 2 திருநங்கைகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 236 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆண் வேட்பாளர்கள் 198 பேரும், 38 பெண் வேட்பாளர்களும் வேட்பு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் எஞ்சிய அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 27ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்