"இதுவரை ரூ.33.46 கோடி, 209 கிலோ தங்கம் பறிமுதல்" - சத்ய பிரதா சாகு தகவல்
தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்ச ரூபாய், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்ட அவர், இதுவரை மொத்தம் 209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி உரிய ஆவணமில்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக மற்றும் திமுக சார்பில் வாக்களர்களுக்கு டோக்கன்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதன் பின்பு கடைசி கட்ட தேர்தல் முடியும் வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கூடாது என்று அறிவித்துள்ளார்.அனைத்து நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் இரண்டு பொது பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story