மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் : இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

பதினோராம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் : இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது
x
தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர்.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு குழித்துறை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பக்கத்து வீட்டை சேர்ந்த நிதின்  மற்றும் சாலமன் 
ஆகிய இருவரும் தன்னை கடத்தி சென்று பாலியல்பலாத்காரம் செய்து, செல்போனில் படம் எடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.இதையடுத்து நிதின் மற்றும் சாலமனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்