கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.
x
கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.  கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் தான் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின்,  அந்தக் கட்சியோடு திமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் விமர்சித்தார். எமர்ஜென்சி காலத்தில் கருத்து சுதந்திரம் எப்படி இருந்தது, எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்