நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

திருச்செங்கோட்டில் நகை செய்து தருவதாகக் கூறி, 5 கோடியே 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை
x
பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 25 லட்சம் மதிப்புள்ள நகையை மோசடி செய்ததாக திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கடை வியாபாரி பாரத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறை, பாலமுருகனை தேடி வந்தநிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பாலமுருகன் நிற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதேபோல் 18 கடைகளில் நகை செய்து தருவதாகக் கூறி 5 கோடி 70 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பாலமுருகனின் மைத்துனர் அருண்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்