"36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும்" - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்

36 ஆயிரம் பழமையான கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
x
2 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ஆயிரம் பழமையான கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். அரியலூரை அடுத்த கிழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் ஆய்வு நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்