டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'கல்லூரி நாள்' விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடைபெற்றது.
x
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்ற,  கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி  ஆண்டு அறிக்கை வாசித்தார்.  கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் கல்லூரி ஆண்டு மலரை வெளியிட, சிறப்பு விருந்தினர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் மூக்கையா பெற்றுக்கொண்டார்.  கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு  அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவின் நிறைவாக, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்