பள்ளிக்கு தேவையான பொருள்கள் சீர்வரிசையாக மக்கள் வழங்கினர்

மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்ட சீர்வரிசை
பள்ளிக்கு தேவையான பொருள்கள் சீர்வரிசையாக மக்கள் வழங்கினர்
x
பள்ளிக்கு தேவையான பொருள்கள் சீர்வரிசையாக எடுத்து சென்ற பெற்றோர் 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு தேவையான பொருள்களை சீர்வரிசையாக எடுத்து சென்று பெற்றோர் வழங்கினர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளிக்கு தேவையான டேபிள் சேர்  பீரோ உள்ளிட்ட பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் - மக்கள் வழங்கினர்

ராஜபாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீர்வரிசையாக மக்கள் வழங்கினர். சோழபுரத்தில் இயங்கி வரும் அந்த பள்ளிக்கு தேவையான பீரோ, மேஜை, நாற்காலி என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இப்பொருட்களை மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்ட சீர்வரிசை

மதுரை மாவட்டம் வலையப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு,  ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான  கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினர். அரசு பள்ளியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதற்காக சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்